News March 3, 2025

உக்ரைனுக்கு மேலும் $2 பில்லியன் நிதி கொடுத்த UK

image

5,000 ஏவுகணைகளை வாங்க உக்ரைனுக்கு $2.84 பில்லியன் நிதியை வழங்க உள்ளதாக UK பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பிற்கு பிறகு, அவர் இதை தெரிவித்துள்ளார். முடக்கி வைக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் லாபத்தில் இருந்து இந்த நிதியை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, உக்ரைனுக்கு நேற்று £2.26 பில்லியன் நிதி வழங்குவதாக UK அறிவித்தது.

Similar News

News March 25, 2026

JUST IN: மயிலம் தொகுதியில் சி.வி சண்முகம் போட்டி!

image

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக எம்.பி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு வழங்கப்பட்டு, வென்றது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

அதிமுக வேட்பாளர் பட்டியல்.. யார் யாருக்கு எந்த தொகுதி?

image

பாலக்கோடு – KP அன்பழகன், விராலிமலை – C விஜயபாஸ்கர், வேதாரண்யம் – OS மணியன், கோவில்பட்டி – கடம்பூர் ராஜு, திருமங்கலம் – RB உதயகுமார், சிவகாசி – KT ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் – பென்ஜமின், கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பவானி – கருப்பணன், கரூர் – MR விஜயபாஸ்கர், அரியலூர் – தாமரை ராஜேந்திரன், ஜோலார்பேட்டை – KC வீரமணி, திருப்பரங்குன்றம் – ராஜன்செல்லப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

News March 25, 2026

BREAKING: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி தொகுதியில் EPS மீண்டும் களமிறங்க உள்ளார். நத்தம்- நத்தம் விஸ்வநாதன், வேப்பனஹள்ளி- KP முனுசாமி, ராயபுரம்- ஜெயக்குமார், தொண்டாமுத்தூர்- SP வேலுமணி, திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன், நன்னிலம் – காமராஜ், மதுரை மேற்கு- செல்லூர் ராஜு, மயிலம்- CV சண்முகம், குமாரபாளையம்- தங்கமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!