News March 22, 2025
கல்வி நிறுவனங்களுக்கு UGC எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாமல் உயர்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது. மேலும், அங்கீகாரமில்லாமல் கல்வி நிறுவனங்கள், பல்கலை.கள் கற்பிக்கும் பட்டப்படிப்புகள் அனைத்தும், உயர்கல்வி அந்தஸ்தைப் பெறாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் <
Similar News
News March 23, 2025
சுவிஸ் ஓபனில் தமிழக நட்சத்திரம் தோல்வி

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தமிழக வீரர் சங்கர் சுப்பிரமணியன் தோல்வியடைந்தார். பிரான்சை சேர்ந்த கிறிஸ்டோ போபோவ்வுடன் மோதிய அவர் 21-10, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதற்கு முந்தைய ஆட்டத்தில் உலகின் 2ஆம் நிலை வீரர் அன்டோசனை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த சங்கர் அங்கு ஜொலிக்க தவறிவிட்டார்.
News March 23, 2025
‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுதாகொங்கராவுடன் சிவா இணைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதனிடையே படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தற்போது ஒரு பதில் கிடைத்துள்ளது. 2026 பொங்கலுக்கு பராசக்தி படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு நடுவில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரைக்கு வரவுள்ளது.
News March 23, 2025
இன்றைய (மார்ச் 23) நல்ல நேரம்

▶மார்ச் – 23 ▶பங்குனி – 09 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 03:30 PM – 04:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 01:30 PM – 02:30 PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM- 04:30 AM ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.