News April 18, 2025
UGC நெட் தேர்வு அறிவிப்பு

யுஜிசி நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர், JRF, PhD சேர்க்கை ஆகியவற்றுக்கான தகுதித் தேர்வான இது வருடத்திற்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) மாதத்தில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 2025 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மே 7-ம் தேதி வரை <
Similar News
News April 21, 2025
முருகன் மாநாட்டில் பங்கேற்பாரா ரஜினி?

ஜூன் 22ஆம் தேதி ‘குன்றம் காக்க, கோவிலை காக்க’ என்ற தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடக்கிறது. இம்மாநாட்டில் நடிகர் ரஜினியை பங்கேற்க வைக்க இந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்து, மாநாட்டிற்கான அழைப்பிதழை இந்து முன்னணி கட்சியினர் வழங்கினார். அரசியலில் இருந்து விலகினாலும், சமீப காலமாக அவரின் பேச்சுகள் அரசியலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
News April 21, 2025
சீனாவில் பறந்த தமிழக பட்டம்!

சீனாவின் வெய்பாங் நகரில் நடந்து வரும் சர்வதேச பட்டம் விடும் போட்டியில், தமிழகத்தின் பட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், காளை மாடு வடிவிலான பட்டம் பறக்கவிடப்பட்டது. தவிர, மூவர்ண கொடி தாங்கி தமிழ்நாடு, இந்தியா என்று பொறிக்கப்பட்ட பட்டமும் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.
News April 21, 2025
மாநில அதிகாரத்தை தமிழகம் விட்டு தராது: ஸ்டாலின்

கூட்டாட்சி தத்துவத்தை குலைத்து, டெல்லியில் அதிகாரத்தை அதிகரிக்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழகம் அனுமதிக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் நியாயமான உரிமைகளுக்கான இப்போராட்டத்தில் மற்ற மாநிலங்கள் இணையும் என நம்புவதாகவும், வலுவான மாநிலங்களால்தான் வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும் எனவும் கூறினார். மேலும், மத்திய – மாநில அரசுகளுக்கான உறவுகளில் சமநிலையை உருவாக்க வேண்டும் என்றார்.