News October 8, 2025

UGC NET டிசம்பர் தேர்வு அறிவிப்பு வெளியானது

image

உதவி பேராசிரியர் மற்றும் JRF தகுதிக்கான NET தேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான NET தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு இன்று முதல் நவ.7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டம் பெற்றவர்கள் (அ) இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News October 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 8, புரட்டாசி 22 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

News October 8, 2025

330 மடங்கு அதிகமாக கிரெடிட் ஆன சம்பளம்

image

ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சம்பள நாளில் திடீரென, சம்பளத்தை விட 10 மடங்கு அதிக பணம் கிரெடிட் ஆனால் எப்படி இருக்கும்? சிலியில் ஒருவருக்கு அவருடைய சம்பளத்தை (₹46,100) காட்டிலும் 330 மடங்கு (₹1.5 கோடி) அதிகமாக கிரெடிட் ஆகியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். நிறுவனம் கூடுதல் பணத்தை திரும்ப கேட்ட போதும், சட்ட போராட்டம் நடத்தி ₹1.5 கோடிக்கும் உரிமையாளராகியுள்ளார்.

News October 8, 2025

லட்சுமண ரேகை வரையப்பட வேண்டும்: CP ராதாகிருஷ்ணன்

image

நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜ்யசபா தலைவர் CP ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு லட்சுமண ரேகை வரையப்பட வேண்டும் என CPR கூறியுள்ளார்.

error: Content is protected !!