News March 18, 2024
கொங்கு மண்டலத்தில் தேர்தல் பொறுப்பேற்கும் உதயநிதி!

கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டுமென ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாகக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றிபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடிக்கிவிட்டுள்ள திமுக தலைமை, அந்த மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News January 23, 2026
சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை (PHOTOS)

நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உட்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களின் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. இதற்கான கடைசி கட்ட ஒத்திகை இன்று காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது. அந்த அணிவகுப்பு ஒத்திகையின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
News January 23, 2026
பெண்களுக்கு ₹50,000 தரும் அரசு திட்டம்

உணவு சார்ந்த தொழில்களை தொடங்க விரும்பும் பெண்களுக்கு அன்னபூர்ணா யோஜனா திட்டம் மூலம் கடன் வழங்குகிறது மத்திய அரசு. இத்திட்டத்தின் கீழ் பிசினஸுக்கு தேவையான மிக்சி, கிரைண்டர், சமையல் பாத்திரங்கள் வாங்க ₹50,000 வரை கடன் பெறலாம். கடனை அடைக்க 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அருகில் இருக்கும் SBI வங்கிக்கு சென்று இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உங்க வீட்டு பெண்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 23, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு ஹேப்பி அறிவிப்பு

உங்களது ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம் ஏதும் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? நாளை (ஜன.24) சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன. வழக்கமாக மாதத்தின் 2-வது வாரத்திலும் நடைபெற வேண்டிய இந்த மாதாந்தர முகாம், பொங்கல் விடுமுறை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை நடைபெறுகிறது. எனவே, தேவையான ஆவணங்களுடன் சென்று திருத்தங்களை மேற்கொள்ளுங்கள். SHARE IT


