News September 10, 2025

மகளிர் உரிமைத் தொகை குறித்து உதயநிதி அப்டேட்

image

விடுபட்ட மகளிருக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி உறுதியளித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு செப்.15-ம் தேதி தான் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இத்திட்டத்தில் 1.2 கோடி பேர் மாதம் ₹1,000 பெற்று வருகின்றனர்.

Similar News

News September 10, 2025

ஐபோன் 16 சீரிஸ்களின் விலையை குறைத்த ஆப்பிள்

image

ஐபோன் 17 சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த நிலையில், இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ்களின் விலையை ₹10,000 குறைத்துள்ளது. முன்பு, ஐபோன் 16 மாடல் ₹79,000-க்கு விற்கப்பட்ட நிலையில், அது தற்போது ₹69,000 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16+ மாடல் ₹79,900 (முன்பு ₹89,900) மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஐபோன் 16+ மாடல் ₹89,900 (முன்பு ₹99,900) விற்கப்படுகிறது.

News September 10, 2025

விஜயகாந்த் வீட்டில் துயரம்.. பிரேமலதா கண்ணீர் அஞ்சலி

image

விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலெட்சுமி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து பிரேமலதா, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது உடலுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான மதுரையில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க OPS நிபந்தனை

image

CM வேட்பாளராக EPS இருக்கக்கூடாது என்று TTV கூறியது, சரியான கருத்து என OPS தெரிவித்துள்ளார். தனக்கு டெல்லியில் இருந்து இதுவரை அழைப்பு வரவில்லை என்ற அவர், ADMK ஒன்றிணையாவிட்டால் திமுகவுக்கே சாதகம் என்றார். மேலும், ஏற்கெனவே EPS உடனான 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவை தீர்க்கப்பட்ட பிறகே EPS-ஐ CM வேட்பாளராக ஏற்பேன் என OPS பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!