News April 27, 2025
திமுக துணை பொதுச் செயலாளராகும் உதயநிதி?

உதயநிதி ஸ்டாலின், திமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு, அக்கட்சித் தலைமை அடுத்து ஒரு பெரிய பதவியை வழங்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. பொதுச் செயலாளராக துரைமுருகன் இருப்பதால், அவருக்கு அடுத்த பதவியில் உதயநிதியை நியமிப்பது குறித்த அறிவிப்பை விரைவில் திமுக வெளியிடும் எனச் சொல்லப்படுகிறது.
Similar News
News April 27, 2025
மருத்துவ பொருள்களைப் பெற போராடும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. அந்நாட்டில், ஒரு ‘மருத்துவ அவசரநிலை’ எழுந்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ரத்தானதை அடுத்து, புற்றுநோய், ரேபிஸ் போன்ற சில நோய்களின் மருந்துகளை சேமிக்க அந்நாட்டின் Ministry of Health அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தற்போது அதன் மருந்து தேவைகளில் 30% – 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது.
News April 27, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
News April 27, 2025
CM ஸ்டாலினின் தாயார் ஹாஸ்பிடலில் அனுமதி!

CM ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் வயிற்று வலி, வாந்தி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியிருந்த நிலையில், இன்று(ஏப்.27) மீண்டும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.