News October 11, 2025
உதயநிதி தலைமறைவு.. சர்ச்சை வெடித்தது

#Rowdytime என தனது செல்ல நாயுடன் DCM உதயநிதி SM-ல் பதிவிடும் போட்டோ இன்று சர்ச்சையாக வெடித்துள்ளது. முன்னதாக செப்.20, 27-ல்(சனிக்கிழமை) நாயுடன் விளையாடும் போட்டோக்களை தனது முகத்துடன் பதிவிட்டிருந்தார். இன்று தலை மறைத்ததுபோல் இருப்பதால் விஜய்யை மறைமுகமாக கூறுகிறார் என ஒரு தரப்பினர் சண்டையிட்டு வருகின்றனர். அதேநேரம், திமுக ஆட்சியின் அவலங்களால் தலைமறைவாக இருப்பதாக அதிமுகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
Similar News
News October 11, 2025
இந்தியாவை விட பழமையான நாடுகள் தெரியுமா?

கலாச்சார அடையாளத்துடன் அமைப்புகளாக உருவான நாடுகளின் காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை, பழமையான நாகரிகங்கள், தேசிய அடையாளம் ஆகியவற்றை கொண்டு நாடுகள் உருவானதை குறிக்கின்றன. எந்த நாடு, எவ்வளவு பழமையானது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த பழமையான நாடுகளை, கீழே கமெண்ட்ல சொல்லுங்க.
News October 11, 2025
BREAKING: அக்.17-ல் கரூர் செல்கிறார் விஜய்

கரூர் துயரம் நடந்து 15 நாள்களான நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அக்.17-ல் சந்திக்க இருப்பதாக விஜய் முடிவெடுத்துள்ளார். அன்றைய தேதியில் அனுமதி கோரி கரூர் SP அலுவலகத்தில் தவெக தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், பாதிக்கப்பட்டோருக்கு தலா ₹20 லட்சம் நிவாரணமும் விஜய் வழங்கவுள்ளார். துயர சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திலேயே நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
News October 11, 2025
இந்தியாவுக்காக சதம்.. டாப்பில் கில்!

இந்தியாவுக்காக WTC தொடரில் அதிக சதங்களை அடித்த வீரராக சுப்மன் கில் மாறியுள்ளார். அவர் 71 இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்துள்ளார். 2-வது இடத்தில் ரோஹித் சர்மா (9 சதங்கள்), 3-வது இடத்தில் ஜெய்ஸ்வால் (7 சதங்கள்) உள்ளனர். அதே நேரத்தில், ஒரு ஆண்டில் இந்திய கேப்டனாக 5 சதங்களை அடித்த கோலியின் சாதனையையும் கில் இன்று சமன் செய்துள்ளார். இருப்பினும், இச்சாதனையை கோலி இரு முறை (2017, 2018) படைத்துள்ளார்.