News September 29, 2025

மீண்டும் துபாய் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்

image

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களில், CM ஸ்டாலின் உள்பட ஆளுங்கட்சி அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் அங்கு சென்றனர். அந்த வகையில், துபாய்க்கு சென்றிருந்த DCM உதயநிதி ஸ்டாலினும், தனி விமானத்தில் நேற்று காலை திருச்சி வந்து, அங்கிருந்து கரூர் சென்றார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பேட்டி கொடுத்துவிட்டு, மீண்டும் தனி விமானம் மூலம் துபாய் சென்றுள்ளார்.

Similar News

News September 29, 2025

விஜய்யை நேரில் சந்திப்பேன்: சீமான்

image

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திலிருந்து தம்பி விஜய் மீண்டு வர வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனி மக்களை சந்திக்க சிறிய பொதுக்கூட்டங்களை விஜய் பயன்படுத்த வேண்டும் என்றும், நாற்காலியில் அமர்ந்து பேச வேண்டும் எனவும் அட்வைஸ் செய்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் விஜய்யை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன் என்றும் சீமான் தெரிவித்தார்.

News September 29, 2025

BREAKING:மௌனம் கலைத்தார் ஆதவ் அர்ஜுனா

image

மரணத்தின் வலியையும், கரூர் மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மரணத்தின் வலியை 5 வயது சிறுவனாக தனது தாயின் தற்கொலையை பார்த்தபோதே உணர்ந்ததாக தெரிவித்த அவர், அந்த வலியை தற்போது மீண்டும் இந்த மரணங்கள் ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையை சுமக்கும் உறவாக தனது பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.

News September 29, 2025

வங்கி கணக்கு இருக்கா? IT நோட்டீஸ் வரும்..கவனம்!

image

➤Savings Account-ல் ஆண்டுக்கு ₹10 லட்சத்துக்கு மேல் வரவு வைக்கப்பட்டால் IT உங்கள் கணக்கை கண்காணிக்கும் ➤₹10 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தால் அதற்கான ஆவணங்களை தெளிவாக வைத்துகொள்ளுங்கள் ➤அடிக்கடி பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனையை செய்தால் உங்கள் விவரங்களை வங்கி ITக்கு அனுப்பும் ➤பரிசாக பெற்ற ஆவணங்கள், விற்பனை ஒப்பந்தங்கள், பெறப்பட்ட சொத்துகளின் ஆவணங்களை வைத்துக்கொள்ளுங்கள். SHARE.

error: Content is protected !!