News September 19, 2025
நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு முதல் நபராக DCM உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கண்ணீருடன் இருந்த ரோபோ சங்கரின் மனைவி, மகள்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். மேலும், மேடை கலைஞராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர் எனவும் தனது X பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
சினிமா ரவுண்டப்: கவனம் ஈர்க்கும் மோகன்லாலின் டீசர்

*இன்று ‘கிஸ்’, ‘சக்தித் திருமகன்’, ‘தண்டகாரண்யம்’, ‘படையாண்ட மாவீரா’ ஆகிய 4 திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. *‘ட்யூட்’ படத்தின் 2-வது சிங்கிளான ‘நல்லாரு போ’ பாடல் இன்று வெளியாகிறது.
*ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது. *நட்டி நடிக்கும் ‘ரைட்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. * மோகன்லால் நடத்த ‘விருஷபா’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
News September 19, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(செப்.19) சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிந்து 82,892 புள்ளிகளிலும், நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 25,393 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Titan, TCS, ICICI Bank, Hindalco, TATA Cons. Prod நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக சரிந்துள்ளன.
News September 19, 2025
ஆயுதத்தை எடுக்க சொன்ன டிரம்ப்; பிரிட்டனில் பரபரப்பு

சமீபத்தில் பிரிட்டனில் குடியேற்றத்துக்கு எதிராக மிகப்பெரிய பேரணி நடந்தது பரபரப்பை கிளப்பியது. பிற நாட்டினர் பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க, தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். மேலும், பிற நாட்டினர் குடியேறினால் அது நாட்டை உள்ளிருந்து அழித்துவிடும் என கூறிய அவர், இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.