News April 1, 2024

உதயநிதி பேசும்போது கவனம் தேவை: நீதிமன்றம் எச்சரிக்கை

image

சனாதன சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க கோரி உதயநிதி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த உச்சநீதிமன்றம், அடிப்படை உரிமைகளை பாதிக்கும் பிரிவில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல; மூன்று வாரத்தில் மனுவில் மாற்றங்கள் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

உச்சத்தை தொட்ட காற்று மாசு: புகைமூட்டமான டெல்லி!

image

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதிலும் இன்று காற்று தரக்குறியீடு 375 ஆக உயர்ந்து, சிவப்பு மண்டலத்தை எட்டியுள்ளது. விவேக் விஹார், ஆனந்த் விஹார், அசோக் விஹார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் AQI 400-ஐ தாண்டி, மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தலைநகர் முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கும் நிலையில், இது ஆபத்தான சூழல் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News October 30, 2025

குழந்தைகளிடம் குடும்பத்தின் பணக்கஷ்டம் பற்றி பேசாதீங்க!

image

உங்கள் குழந்தைகளை குடும்பத்தின் நிதி கஷ்டத்தை சொல்லி வளர்க்குறீங்களா? அப்படி செய்வது அவர்களை மனரீதியாக பாதிக்கும் என நிபுணர்கள் சொல்றாங்க. அதற்கு பதிலாக ➤பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கலாம் ➤அதனை சேமிக்க ஊக்கப்படுத்தலாம் ➤பிடித்த பொருள்களை பணத்தை சேமித்து வைத்து வாங்க சொல்லலாம். இதனால், வளர்ந்ததும் அவர்கள் பணத்தை பொறுப்புடன் கையாள்வார்கள். பெற்றோர்களுக்கு SHARE THIS.

News October 30, 2025

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகர் ஃபிலாய்ட் ரோஜர் மையர்ஸ் ஜூனியர்(42) காலமானார். வில் ஸ்மித் நடிப்பில் 1990-ல் வெளிவந்த ‘The Fresh Prince of Bel-Air’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தனது நகைச்சுவையால் ரசிகர்களின் மனங்களை வென்ற இவர், மாரடைப்பால் உயிரிழந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மை காலமாக நடிகர்கள் பலரும் மாரடைப்பால் மறைந்து வருகின்றனர்.

error: Content is protected !!