News August 4, 2024
தமிழகம் முழுவதும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு 2024-25க்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விளையாட்டில் கபடி, சிலம்பம் உள்பட 53 வகையான போட்டிகள் நடத்தப்படும். நடப்பாண்டுக்கான போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ள சூழலில், போட்டியில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் விவரங்களை <
Similar News
News April 5, 2026
சீமானுக்கு கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்த மக்கள்

சீமானின் தேர்தல் பிரசாரத்தில் தொண்டர்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து நிதி கொடுப்பது தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், நோட்ட கொடுத்தா வோட்டு போடுற கூட்டத்துல, நோட்ட கொடுத்து வோட்டு போடுற கூட்டம் என் மக்கள் என தெரிவித்துள்ளார். இந்த அரசியல் களத்தில் தான் பெற்ற பேரன்பு இதுவெனவும் அவர் கூறியுள்ளார்.
News April 5, 2026
IPL TOSS: சென்னை அணி பவுலிங்

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற CSK பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. CSK அணியில் ராகுல் சாஹருக்கு பதில் இன்று ஓவர்டன் களமிறங்கியுள்ளார். CSK முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் RCB 6 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 5, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


