News April 14, 2024
உதயநிதி ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 9, 2025
மயிலாடுதுறை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிணைந்து, மத்திய அரசை கண்டித்தும் எதிரான கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
News December 9, 2025
BREAKING: விஜய்க்கு சீமான் ஆதரவு

விஜய்யை அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்துவரும் சீமான், தற்போது விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுச்சேரிக்கு மாநில உரிமை கோரிய விஜய்யின் கருத்துக்கு ஆதரவாக சீமான் பேசியுள்ளார். மாஹே, ஏனாம் வேண்டாம், மாநில உரிமை வேண்டும் என முதலில் நான்தான் புதுச்சேரிக்காக பேசினேன் என்றும், எனது கோரிக்கை வலுபெறகிற மாதிரி தம்பி விஜய்யும் பேசியிருப்பது மகிழ்ச்சி எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
புதுச்சேரி முதல்வருக்கு விஜய் பாராட்டு

புதுச்சேரியில் இன்று பொதுகூட்டம் நடத்திய விஜய், அதற்கு பாதுகாப்பு அளித்த மாநில அரசையும், CM ரங்கசாமியையும் மீண்டும் பாராட்டியுள்ளார். மேலும் எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினர், கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள் எனவும் X பதிவில் குறிப்பிட்டுள்ளார். நம் அரசியல் பயணத்தை முடக்க திமுக போடும் திட்டம் அணுவளவும் நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


