News August 12, 2024
உதயநிதி துணை முதல்வராக வேண்டும்: அமைச்சர்

உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது தங்கள் விருப்பம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “உதயநிதியை உடனடியாக துணை முதல்வராக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர், பரிசீலனையில் இருக்கிறது; பொறுத்திருங்கள் என பதிலளித்துள்ளார் எனக் கூறினார். உதயநிதிக்கு விரைவில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2026
நிதிஷ்குமார் CM பதவியில் இருந்து விலகலா?

பிஹார் CM பொறுப்பில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவர் ராஜ்யசபா MP தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்க்கு மத்தியில் முக்கிய அமைச்சரவை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமாருக்கு DCM பதவி வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. பிஹார் அரசியலில் ஏற்பட உள்ள இந்த அதிரடி மாற்றங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
News March 4, 2026
தனிக்கட்சி தொடங்கினார்.. இபிஎஸ் அதிர்ச்சி

‘புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கியுள்ளார். புரட்சி என்பது MGR, ஜெயலலிதாவை குறிக்கும் என தெரிவித்த அவர், தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பை முன்னெடுத்த இவர், OPS திமுகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்கியது EPS-க்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 4, 2026
ரேபிடோ ஓட்டுநர் பெயரில் ₹300 கோடி.. சிக்கிய ஹவாலா கும்பல்

அகமதாபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் சம்பந்தப்பட்ட ₹550 கோடி ஹவாலா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதம் ₹10,000 சம்பாதிக்கும் ரேபிடோ ஓட்டுநரான பிரதீப் பெயரில் ₹300 கோடி வரவு வைக்கப்பட்டது ED-க்கு சந்தேகத்தை எழுப்பியது. இதுதொடர்பான விசாரணையில், பிரதீப் தனது வங்கி கணக்கை ₹25,000-க்கு வாடகைக்கு விட்டது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


