News August 22, 2024

திமுக கொடியுடன் உதயநிதி.. விஜய்க்கு போட்டியா?

image

கையில் திமுக கொடியுடன் உதயநிதி ஸ்டாலின் நிற்பது போன்ற வீடியோவை திமுக I.T. பிரிவு, தனது x தளத்தில் வெளியிட்டிருப்பது, அரசியல் களத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது. பனையூரில் தவெக கட்சிக் கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அக்கொடி பற்றிய செய்தி வைரலாகி வரும் நிலையில், திமுக I.T. பிரிவின் எக்ஸ் பக்கத்தில் உதயநிதியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

டிச.14 முதல் விருப்ப மனு பெறலாம்: PMK

image

2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் டிச.14-டிச.20 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என பாமக அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி என இரு மாநிலங்களுக்கும் சேர்த்து, பனையூர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, மனுக்களை பெறலாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். மனுவில், அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, தலைமை அலுவலகத்தில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 11, 2025

பயணிகளின் வீடியோக்கள் வைத்து மிரட்டல்… உஷார்!

image

உ.பி.,யில் பயணிகளின் அந்தரங்க வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூர்வாஞ்சல் ஹைவேயில் காரில் சென்ற புதுமண தம்பதி ரொமான்சில் ஈடுபட்டுள்ளனர். இதை சிசிடிவியில் பதிவுசெய்த உள்ளூர் டோல் பிளாசா மேனேஜர், அதை காட்டி பயமுறுத்தி அவர்களிடம் பணம் பறித்ததுடன், அதை SM-லும் வெளியிட்டுள்ளார். போலீஸ் அவரை விசாரித்ததில் இப்படி பல வீடியோக்களை அவர் பதிவுசெய்தது தெரியவந்துள்ளது.

News December 11, 2025

அடுத்த பாய்ச்சலுக்கு தயாரான அஜித்

image

சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, கார் ரேஸில் அஜித் பிஸியாக உள்ளார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த 24 ஹவர்ஸ் கிரெவென்டிக் தொடரில், 4-வது இடத்தை அஜித்தின் அணி பிடித்தது. இதனையடுத்து ஏசியன் லீ மான்ஸ் தொடருக்கு அவர் தயாராகியுள்ளார். அதுதொடர்பாக வெளியாகியுள்ள புதிய போட்டோவை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரேஸில் அஜித்துடன், பிரபல ரேஸர் நரேன் கார்த்திகேயனும் சீறிப்பாய உள்ளார்.

error: Content is protected !!