News March 24, 2024

ஜெயலலிதாவை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

image

ஜெயலலிதாவை உதயநிதி புகழ்ந்து பேசியுள்ளார். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக திமுகவும், அதிமுகவும் செயல்படுகின்றன. இந்நிலையில், மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய செய்தபோது உதயநிதி, “நீட் தேர்வை ஜெயலலிதா அனுமதிக்கவில்லை. இதனால் அவர் இருந்தவரை தமிழகத்தில் நீட் நடக்கவில்லை. பிறகு வந்த அடிமைக் கூட்டமே (இபிஎஸ் அரசு) அனுமதியளித்தது. இதனால் தமிழகத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்து விட்டனர்” என்றார்.

Similar News

News October 24, 2025

FLASH: தங்கம் விலை தலைகீழாக மாறியது

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.

News October 24, 2025

திருமணத்தை பாதியில் நிறுத்திய நடிகைகள்

image

பிரபல நடிகைகள், தங்களின் திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் பாதியில் நிறுத்திவிட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று, அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. அந்த நடிகைகள் யார் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், தமிழ் நடிகைகளும் உள்ளனர். இவர்கள் தவிர்த்து, வேறு ஏதேனும் நடிகைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

News October 24, 2025

டிரெண்ட் மாற்றம்: இனி பிராண்டுக்கு வேலை இல்லை?

image

IIT, IIM-களில் படித்தவர்களை பணிக்கு அமர்த்தும் முன்னணி நிறுவனங்களின் மனநிலை மாறி வருகிறது. ‘Blind’ செயலி நடத்திய சர்வேயில் ஆப்பிள், Nvidia, Zoho போன்ற நிறுவனங்கள், Tier 3 கல்லூரிகளில் படித்தவர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்துள்ளது. பிராண்டட் கல்வி நிறுவனங்கள் வேலை பெறுவதை முதன்மையாக கொண்டு செயல்படுகின்றன. ஆனால், ஊழியரின் வளர்ச்சி அவரது திறமை சார்ந்தது என கம்பெனிகள் கருதுகின்றன.

error: Content is protected !!