News May 20, 2024

இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி

image

திமுக இளைஞர் அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அன்பகத்தில் நடந்தது அனைவருக்கும் அறிந்ததே. அதில், மாவட்ட & மாநில நிர்வாகிகளின் மீது வந்த புகார்கள் குறித்து அவர்களிடமே விரிவாக பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன நிர்வாகிகளிடம், தேர்தல் முடிவு வெளியானப் பிறகு பலரது பதவிகள் பறிக்கப்படுமென அவர் ‘ஷாக்’ கொடுத்திருக்கிறார்.

Similar News

News September 14, 2025

பாராட்டு விழாவை நம்ப முடியவில்லை: இளையராஜா

image

இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு <<17700409>>பாராட்டு விழா <<>>நடத்தியது தமிழக அரசுதான் என இளையராஜா தெரிவித்தார். சிம்பொனி இசையமைக்க செல்லும் முன்னே CM ஸ்டாலின் நேரில் வாழ்த்தியதாக கூறிய அவர், இன்று பாராட்டு விழா நடத்தியதை நம்ப முடியவில்லை என கூறினார். தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் CM கருணாநிதிதான் கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

News September 14, 2025

ஒரு நாள் லீவு போடுங்க… ஏன் தெரியுமா?

image

மாதத்தில் ஒரு நாளோ அல்லது உங்கள் துணைவர் எதிர்பார்க்காத ஒரு நாளிலோ லீவு எடுத்து, அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துங்கள். வழக்கமான கடமைகளை ஒருநாள் தள்ளி வையுங்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செல்லுங்கள். அது கடற்கரை, பூங்கா, சினிமா தியேட்டர் எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இருவரும் மனம்விட்டு ரிலாக்சாக பேசுங்கள். இது அன்றாட மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்து, உங்கள் உறவை வலுப்படுத்தும்.

News September 14, 2025

பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

image

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.

error: Content is protected !!