News February 6, 2026

U19 WC: மகுடம் சூடுமா இந்தியா அணி

image

ஜிம்பாப்வேவில் நடக்கும் U19 உலகக் கோப்பை தொடரின் ஃபைனலில், இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இளம் படை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் வலுவாக காணப்படுகிறது. அதேநேரத்தில் நடப்பு தொடரில் இங்கிலாந்தும் தோல்வியை தழுவாமல் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. எனவே, போட்டி கடுமையானதாக இருக்கும். போட்டியில் இந்தியா வென்றால் 6-வது முறையாக மகுடம் சூடும்.

Similar News

News February 6, 2026

திமுகவில் இணைந்தார்.. விஜயபாஸ்கர் அதிர்ச்சி

image

கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளர் Dr.தர்மேந்திரன், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டார். இது, MR விஜயபாஸ்கர் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியை கைப்பற்ற விஜயபாஸ்கரும், தக்க வைக்க செந்தில் பாலாஜியும் கடுமையாக உழைத்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக இரு தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை தங்கள் வசம் இழுத்து வருவதால் களம் சூடுபிடித்துள்ளது.

News February 6, 2026

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்

image

TN அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா கூறியுள்ளார். ➤தமிழ்நாட்டுக்கு வரும் அடிடாஸ் நிறுவனம் ➤ஹுண்டாய் போன்ற ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்கம் ➤வியட்நாமின் வின்பாஸ்ட் நிறுவனம் துவக்கம் ➤ராணிப்பேட்டையில் பிப்.9 டாடா JLR பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியாகும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

News February 6, 2026

பிரபல நடிகரை காதலிக்கிறாரா சிவாங்கி? வைரல் போட்டோ!

image

நடிகை சிவாங்கி நடிகர் முகேஷ் ரவியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். முகேஷ் ரவி ‘கம்பி கட்ன கதை’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த போட்டோவிற்கு அவர் லவ் எமோஜியும் வைத்துள்ளதால், இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், இது ஏதாவது புது ஆல்பம் பாடலாக இருக்கலாம் எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!