News January 17, 2026
U19 WC: இந்திய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்

U19 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு இந்திய அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தொடக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும், வைபவ் சூர்யவன்ஷி(72), அபிக்யான் குண்டு(80) அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தனர். 39-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் 48.4 ஓவர்களில் இந்தியா 238 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
Similar News
News February 6, 2026
BREAKING: கேரட் விலை வரலாறு காணாத அளவு குறைந்தது

உடலுக்கு குளிர்ச்சியையும், கண் பார்வைக்கு சிறப்பான அருமருந்தாகவும் உள்ள கேரட்டின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ கேரட் விலை ₹7 – ₹10 வரையிலும், ஊட்டி கேரட் ₹15 – 20 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வரத்து அதிகரிப்பே காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும், சில்லறை கடைகளில் ₹15 – 25 வரையில் விற்கப்படுவதால் இல்லத்தரசிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
News February 6, 2026
உண்மை நிலையை அறியாத கனிமொழி: அண்ணாமலை

TN-ல் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்துக்கு திமுகவே காரணம் என அண்ணாமலை கூறியுள்ளார். TN வளர்ச்சி திட்டங்கள் குறித்த உண்மை நிலையை அறியாமல் கனிமொழி பேசுவதாக கூறிய அவர், TN-ல் தற்போது ₹35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றார். இருப்பினும், திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலங்களை TN அரசு விரைவாக கையகப்படுத்த தவறியதால்தான் தாமதம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
BREAKING: தேர்தல் கூட்டணி.. கிருஷ்ணசாமி அறிவித்தார்

கூட்டணி விவகாரத்தில் ஆட்டம் காட்டி வரும் கிருஷ்ணசாமி, புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் வலுவான வெற்றிக் கூட்டணி அமையும் என்றும் கூறினார். குறிப்பாக, புதிய தமிழகம் கட்சிக்கு தனித்தொகுதி மட்டுமின்றி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் இருப்பதால் தென் தமிழகத்தில் அதிகம் போட்டியிடுவோம் என்றார். உங்கள் கருத்து?


