News February 2, 2025

U19 T20 பைனல்: ஆரம்பமே அசத்திய இந்தியா!

image

இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை U19 மகளிர் T20 இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட் செய்து வருகிறது. 2 ஓவர்களில் அந்த அணி 11/1 எடுத்துள்ளது. இந்தியாவின் பருணிகா சிசோடியா, தென்னாப்பிரிக்காவின் சிமோனை கிளின் போல்ட் செய்தார். கடந்த 2023ல் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி மீண்டும் சாதிக்குமா? போட்டி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் லைவ் ஒளிபரப்பாகி வருகிறது.

Similar News

News March 11, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 11, மாசி 27 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: அஷ்டமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 11, 2026

ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

image

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

கண்ணாயிரம் அந்த சமையல் Weapons எடு..

image

இன்றைய தலைமுறை தம்பதிகள் பலரிடம், ஏனோ வீட்டில் சமைக்கும் ஆர்வம் சற்று குறைவாகவே உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அவர்கள் தற்போது, ஹோட்டல்கள் மூடப்படுவதால் வீட்டில் சமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சோதனைக் காலமாக தம்பதிகள் கருதினாலும், ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டதால் இம்மாதம் ஆயிரக்கணக்கில் மிச்சமாகும் என வீட்டுப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!