News November 5, 2025

U19 உலகக்கோப்பை ரேஸில் டிராவிட் மகன்!

image

BCCI ஒவ்வொரு ஆண்டும் Challenger Trophy-ஐ நடத்தி வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், U19 WC-கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில், நடப்பு ஆண்டுக்கான Challenger Trophy இன்று தொடங்கியுள்ளது. இதில் Team A, B, C என 3 அணிகள் மோதுகின்றன. இதில், Team C-ல் ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட் இடம்பிடித்துள்ளார். அன்வே விக்கெட் கீப்பர் – டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார்.

Similar News

News November 5, 2025

IND A அணி அறிவிப்பு: ரோஹித், கோலிக்கு இடமில்லை

image

SA A அணிக்கு எதிரான ODI தொடருக்கான (LIST A), IND A அணி அறிவிக்கப்பட்டுள்ளது. IND A அணி: *திலக் வர்மா (C) *கெய்க்வாட் (VC) *அபிஷேக் சர்மா *ரியான் பராக் *இஷான் கிஷன் *ஆயுஷ் பதோனி *நிஷாந்த் சிந்து *விப்ராஜ் நிகம் *மானவ் சுதர் *ஹர்ஷித் ராணா *அர்ஷ்தீப் சிங் *பிரஷித் கிருஷ்ணா *கலீல் அகமது *பிரப்சிம்ரன் சிங். ரோஹித் – கோலி அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

News November 5, 2025

திமுகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்?

image

PH மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த விவகாரம் அடங்குவதற்குள் அதிமுகவில் உள்ள அதிருப்தி தலைவர்கள் சிலர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, OPS அணியில் உள்ள Ex அமைச்சரும், MLA-வுமான R.வைத்திலிங்கம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு ‘Wait and see’ என சூசகமாக பதில் அளித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

News November 5, 2025

40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி -கமல் கூட்டணி

image

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2027 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹிட் படமான ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் – சுந்தர் சி கூட்டணி இணைகிறது. கடைசியாக 1985-ல் ஹிந்தியில் வெளியான கிராப்தார் படத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்திருந்தனர்.

error: Content is protected !!