News July 25, 2024
“தங்கலான்” படத்திற்கு ‘U/A’

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள “தங்கலான்” படத்திற்கு தணிக்கைக்குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில், விக்ரமின் கெட் அப், ஜி.வி.பிரகாஷின் இசை, ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் என அனைத்தும் மிரட்டலாக இருந்தது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் ஆக.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
Similar News
News March 10, 2026
இரவில் அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

இரவில் வளர்சிதை மாற்றம் குறைவதால், அரிசி சாப்பிட்டால் கொழுப்பு திரட்டலின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியலாக இதை அணுகுவோம். எடை அதிகரிப்பு என்பது உட்கொள்ளும் கலோரிகளுக்கும், எரிக்கப்படும் கலோரிகளுக்கும் உள்ள சமநிலையை பொறுத்து அமைவதாகும். இரவில் உடலின் செயல்பாடு குறையுமே தவிர, நிற்காது. அதனால், குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள அறிவியல் பூர்வமாக அறிவுறுத்தப்படுகிறது.
News March 10, 2026
விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி பதவி நீக்கம்

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
News March 10, 2026
ராசி பலன்கள் (10.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


