News November 29, 2024
‘புஷ்பா 2’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

‘புஷ்பா 2’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வரும் டிச. 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘கிஸ்ஸிக்’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 25, 2025
பாக். வீரருக்கு அழைப்பு.. நீரஜ் சோப்ரா வருத்தம்

எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
News April 25, 2025
₹1000 கோடி முதலீடு… தொழில்துறையை ஈர்க்கும் TN

தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
News April 25, 2025
பாக். துணை பிரதமரின் சர்ச்சை பேச்சு.. தொடரும் பதற்றம்

பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக பார்க்கப்படும் எனவும் இசாக் தார் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.