News August 21, 2024

G.O.A.T படத்திற்கு U/A சான்றிதழ்

image

விஜய் நடித்துள்ள G.O.A.T படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் விஜய் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். பொதுவாக குடும்பப்பாங்கான படமாக இருந்தாலும் ரத்தம் தெறிக்கும் வகையில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இருந்தால் U/A, A சான்றிதழ் வழங்கப்படும். ₹300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் செப்.5ல் வெளியாக உள்ளது.

Similar News

News March 23, 2026

இந்தியாவின் ஆபத்பாந்தவனாக கைகொடுத்த அர்ஜென்டினா

image

ஈரான் மீதான் இஸ்ரேல் போரால் எரிவாயு இறக்குமதி தடைபட்டு இந்தியா தடுமாறி வருகிறது. இந்தியா தனது LPG தேவைக்கு வளைகுடா நாடுகளின் இறக்குமதியையே 90% சார்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஆப்த்பாந்தவனாக மாறி கைகொடுத்துள்ளது அர்ஜெண்டினா. அதாவது கடந்த 3 மாதங்களில் சுமார் 50,000 டன் LPG-யை இந்தியாவிற்கு விநியோகித்துள்ளது அர்ஜென்டினா. இது கடந்த ஆண்டு பெறப்பட்ட 22,000 டன்களை விட இரு மடங்கு அதிகமாகும்.

News March 23, 2026

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் இவரா?

image

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி குறித்த Ex வீரர் ஸ்ரீகாந்தின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், MI அணியில் டி20 WC வென்ற ரோஹித் சர்மா & சூர்யகுமார் யாதவ் என்ற 2 கேப்டன்கள் உள்ளனர்; ஆனால், அவர்கள் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறார்கள் என விமர்சித்துள்ளார். ஹர்திக் நல்ல கேப்டன்தான், ஆனால் அப்பொறுப்பை சூர்யாவிடம் விட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News March 23, 2026

கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி.. மத்திய அரசின் ஹேப்பி நியூஸ்

image

PM மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தில், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்காக முதல் குழந்தைக்கு ₹5,000 வழங்கப்படுகிறது. அதேபோல, 2-வது முறையாக பெண் குழந்தை பெறுபவர்களுக்கு ₹6,000 கிடைக்கும். இதில் பயன்பெற SC/ST வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2 தவணைகளாக வழங்கப்படும் தொகைக்கு <>PMMVY<<>>-ல் விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!