News April 26, 2025
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவர் கைது

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று குல்காமின் குயிமோ அடுத்த தொகேபரா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குயிமோவைச் சேர்ந்த பிலால் அகமது பட் மற்றும் முகமது இஸ்மாயில் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News April 27, 2025
அது தோனிக்கும் தெரியும்: ரெய்னா

இந்த முறை சரியான வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது தோனிக்கு தெரியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 43 வயதிலும் ஒரு கேப்டனாக தோனி அணிக்கு பாடுபடுவதாக கூறிய அவர், ₹18 கோடி, ₹17 கோடி என சம்பளம் வாங்கும் வீரர்கள் ஒழுங்காக விளையாடாமல், கேப்டனுக்கும் பதில் கூறாமல் இருப்பதாகவும் சாடியுள்ளார். மேலும், இந்த முறை ஏலத்தின் போது வீரர்கள் தேர்வில் தோனி அதிகமாக ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
பாக். ராணுவத்திடம் சிக்கிய வீரரின் நிலை என்ன?

தவறுதலாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமாரை ஒப்படைக்க பாக். ராணுவம் மறுத்து வருகிறது. கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாள்களாகியும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பாக். விடாப்பிடியாக இருந்து வருகிறது. பூர்ணம் குமாரை மீட்க BSF பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பாக். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
News April 27, 2025
நடிகையா, சச்சின் மகளா? கில் கொடுத்த விளக்கம்

கடந்த 3 ஆண்டுகளாகவே சிங்கிளாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் சந்தித்தே இருக்காத பெண்களுடன் கூட தன்னை தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவதாகவும், தன்னுடைய முழுக்கவனமும் தற்போது கிரிக்கெட்டில் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சச்சின் மகள் சாரா மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோருடன் கில் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் பரவின.