News March 28, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் இருவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் கஃபேயில் மார்ச் 1ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், குண்டு வெடிப்பை நிகழ்த்தியவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் மேலும் இருவர் இன்று கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News March 24, 2026
EPS-க்கு வெறும் அறிவிப்பாளர் பதவி: ஐ.பெரியசாமி

டெல்லியில் முடிவு செய்ததை சொல்லும் வெறும் அறிவிப்பாளர் பதவியை மட்டும் பெற்றதால் EPS-க்கு என்ன பெருமை என்று ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டிய இடத்தில், பாஜகவை EPS நிறுத்தியிருக்கிறார் என்று சாடிய அவர், ‘மாப்ள அவர்தான்; ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது’ என்பதை போல அமித்ஷாவின் கணக்கை EPS வாசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
பாமக குறிவைக்கும் தொகுதிகளின் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அக்கட்சி குறிவைத்துள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தருமபுரி, செஞ்சி, திண்டிவனம் (அ) அரூர், வானூர் தொகுதிகளை கேட்டுள்ளதாம். அதேபோல், செய்யாறு, ஜெயங்கொண்டம், மயிலம், நெய்வேலி, மேட்டூர், புவனகிரி, விருத்தாசலம், குன்னம், ஆற்காடு, விழுப்புரம், ஓமலூர் தொகுதிகளும் அந்தப் பட்டியலில் உள்ளன.
News March 24, 2026
BREAKING: விசிக தனித்து போட்டி.. திருமா அறிவித்தார்

புதுச்சேரி தேர்தலில் விசிக தனித்து போட்டியிட உள்ளதாக திருமா அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு தொகுதியுடன் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விசிக இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், விசிகவுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக, காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுவதாக திருமா அறிவித்துள்ளார்.


