News April 14, 2025
அம்பேத்கர் எழுதிய 2 நூல்கள் தமிழில் வெளியீடு!

அம்பேத்கர் எழுதிய Annihilation of Caste, Riddles in Hinduism ஆகிய ஆங்கில புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களை CM ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ₹227.85 கோடி மதிப்பில் பள்ளி, கல்லூரி விடுதி கட்டடங்களை திறந்துவைத்து, ₹104.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் CM வழங்கினார்.
Similar News
News January 17, 2026
புதுவை: ரூ.12,000 உதவித்தொகை வேண்டுமா?

புதுவை பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், சாதி, மண்டல அடிப்படையில் தேர்வுச் செய்யப்படும் 125 மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரூ.12,000 உதவித்தொகையாக வழங்கும். இதற்கு <
News January 17, 2026
அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் டூப்: TRB ராஜா

அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அமைச்சர் TRB ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு டூப் போட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுக பரிதாபமாகிவிட்டதாக அவர் சாடியுள்ளார். 2021-ல் திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய EPS, இப்போது அதே திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
விடுமுறை.. அரசு கூடுதல் மகிழ்ச்சியான அறிவிப்பு

தை அமாவாசை தினமான நாளை, பலரும் ராமேஸ்வரத்துக்கு செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். உங்களுக்காகவே அரசு சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று சென்னை, சேலம், கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை மறுமார்க்கமாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.


