News March 18, 2024
ராமநாதபுரம் அருகே இருவர் கைது

ராமநாதபுரம் புது அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். நிதி தணிக்கை உதவி இயக்குநராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.பூட்டிக் கிடந்த இவரது வீட்டில் 45 பவுன் நகை மார்ச் 8ல் திருடு போனது.இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோகன் (39), மதுரை காளவாசல், சம்மட்டிபுரம் மகேந்திரன் (33) ஆகியோரை பஜார் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
ராம்நாடு: அரசு பரிசுத்தொகை ரெடி! மரம் வளர்க்க ரெடியா?

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆர்வமுள்ள நபர்கள் (அ) அறக்கட்டளைகள் 2 1/2 ஆண்டுகளுக்கு அரசு நிலத்தில் மரம் நடுதலை மேற்கொண்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு மரம் வளர்த்தால் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வெகுமதி (பரிசுத்தொகை) அளிக்கப்படும். மாநில விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்படும். தொடர்புக்கு – 7708633668. நம்ம ஊரை பசுமையாக்க எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News August 27, 2025
“SAFE RAMNAD”: ராமநாதபுரம் போலீசாரின் முயற்சிக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி safe ramnad என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். காவல் கண்காணிப்பாளர் சதிஷ் மற்றும் காவல்துறையினரின் இந்த செயல்பாடு பொது மக்களிடம் பாராட்டுகள் மற்றும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
News August 26, 2025
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்க விழா

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற 2025 ஆம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியை தொடக்க விழா (ஆக.26) நடைபெற்றது. திமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.