News May 17, 2024
ட்விட்டர் இனி எக்ஸ்.காம்

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், அமெரிக்காவில் கடந்த 2006இல் ஆரம்பிக்கப்பட்டது. 2022இல் ட்விட்டரை டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, பெயரை எக்ஸ் என்று மாற்றினார். அப்போதிலிருந்து ட்விட்டர், எக்ஸ் என்ற பெயரில் செயல்படுகிறது. எனினும், இணையதள முகவரி ட்விட்டர் என்றே இருந்தது. தற்போது, இணைய முகவரியும் ட்விட்டர்.காம் என்பதிலிருந்து, எக்ஸ்.காம் என மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
விழுப்புரம்: மருமகனுக்காக தன்னுயிரை மாய்த்த மாமா!

விழுப்புரம்: மேலக்கொந்தையை சேர்ந்த குமார் (53), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மருமகனை சென்று பார்த்து வந்துள்ளார். அதையொட்டி மனஉளைச்சலில் இருந்து வந்த அவர், அருகிலிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக, RSS: கருணாஸ்

தமிழர்களின் மத நல்லிணக்கத்தை பாஜக, RSS கலவரமாக மாற்றுகின்றன என்று கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் எப்போதும் அடிபணிய மாட்டார்கள் எனக்கூறிய அவர், தீபம் ஏற்றும் தூணை விட்டுவிட்டு, ஆங்கிலேயர் வைத்த கல்லை தீபத்தூண் என்று அழிச்சாட்டியம் செய்கின்றனர் எனவும் விமர்சித்துள்ளார்.
News December 7, 2025
குளிர்காலத்திலும் முகம் பளபளக்க ‘4’ டிப்ஸ்

★குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுவது, சருமத்தை பளபளப்பாக்கும் ★சரும ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள பழங்களை சாப்பிடவும் ★அதிகமாக குளிர்கிறது என்று, ஓவர் சூடான நீரில் குளிக்க வேண்டாம். அது சருமத்தை வறட்சியாக்கும் ★உடலில் நீரிழப்பு ஏற்படும்போது சருமம் வறண்டு விடும். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸ சொல்லுங்க.


