News March 24, 2025

தினமும் இரு வேளை அவசியம்!

image

பல் வலி, ஈறுகள் அழற்சி போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட தினமும் ஆயில் ஃபுல்லிங் செய்வது நல்ல பலனைத்தரும். 1 டீஸ்பூன் உப்பை லேசான சுடு தண்ணீரில் கலந்து காலை, மாலை இரு வேளைகளிலும் வாய் கொப்பளியுங்கள். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயையும் எடுத்துக்கொள்ளலாம். பேக்கிங் சோடாவை பேஸ்டாக்கி ஈறுகளின் மீது தடவுவதால் அழற்சி தடைபடும். வீக்கம் குறையும்.

Similar News

News March 26, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியா?

image

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இபிஎஸ் ஏதோ நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாஜக உடன் அரசியல் உறவே கிடையாது எனக் கூறிய இபிஎஸ், என்ன நிர்பந்தத்தில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார் என தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது, கல்யாண தேதி இன்னும் தெரியவில்லை’ எனவும் முத்தரசன் விமர்சித்தார்.

News March 26, 2025

தலயுடன் செல்பி.. நடிகை செம ஹாப்பி

image

கடலோர பாதுகாப்பு குறித்து சென்னையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நடத்தும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி பங்கேற்றார். இதில் நடிகர் பார்த்திபன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது தோனியுடன் எடுத்துக்கொண்ட செல்பியை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

News March 26, 2025

யோகி ஆதித்யநாத் விமானத்தில் திடீர் கோளாறு

image

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை ஆக்ராவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். ஆனால், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் அவரது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் ஆக்ரா ஏர்போர்ட்டில் அவரது விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர், மற்றொரு விமானத்தில் அவர் லக்னோ புறப்பட்டு சென்றார்.

error: Content is protected !!