News September 27, 2025
TVK Vs DMK இடையே போட்டி: விஜய்

திமுக போன்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற மாட்டோம்; நடைமுறைக்கு எது சாத்தியமோ, அது மட்டுமே தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று விஜய் தெரிவித்துள்ளார். 2026-ல் திமுக – தவெக இடையில்தான் போட்டி எனக் கூறிய அவர், ஆட்சிக்கு வந்த உடனே பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, தரமான கல்வி, மக்களுக்கான மருத்துவ வசதி போன்ற அனைத்தையும் உடனே தவெக செய்யும் என உறுதியளித்தார்.
Similar News
News September 27, 2025
திமுக ஆட்சியை விஜய் அம்பலப்படுத்துகிறார்:தமிழிசை

திமுக ஆட்சியை விஜய் அம்பலப்படுத்தி கொண்டிருப்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுவதால் திமுகவை எதிர்ப்பதிலேயே அவரது கவனம் தொடரட்டும் என்றும் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் போலீஸுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் இருப்பதாகவும் தமிழிசை பேசினார்.
News September 27, 2025
5G போன் யூஸ் பண்றீங்களா..

நெட் ஸ்பீடுக்காக பலரும் 5G போனுக்கு மாறிவிட்டனர். ஆனால், 5G போனின் பேட்டரி சீக்கிரத்தில் காலியாகும் தெரியுமா? நெட் ஸ்பீடு குறித்து ஆராயும் ookla நிறுவனம் நடத்திய ஆய்வில், 5G போன்களில் 6%- 11% வரை பேட்டரி வேகமாக காலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 4G-க்கு மாற வேண்டிய அவசியமில்லை *Brightness கம்மியா வைங்க *போனின் Vibration மோடை Off பண்ணுங்க *Background app-களை கிளியர் பண்ணுங்க. SHARE.
News September 27, 2025
‘IDIOT’ என்று தேடினால் டிரம்ப் போட்டோ வருவது ஏன்?

கூகுளில் ‘IDIOT’ என்று தேடினால் டிரம்ப்பின் போட்டோ வருவது ஏன் என்பது குறித்து அமெரிக்க நீதித்துறையிடம் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். கூகுள் சொந்தமாக கருத்துகளை உருவாக்குவதில்லை எனவும், மக்கள் பதிவேற்றும் கீவேர்டுகள், போட்டோக்களையே கூகுள் வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் சார்பு நிலையுடன் கூகுள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.