News February 26, 2025
TVK 2ஆம் ஆண்டு தொடக்க விழா கோலாகலம்

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை நடைபெறவுள்ளது. 2026 சட்டசபை தேர்தல், கூட்டணி, கட்சியை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாகவும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தேர்தல் வியூக பணியில் கைகோர்த்துள்ள பிரசாந்த் கிஷோரும் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார்.
Similar News
News February 26, 2025
வேகமாக பரவும் மர்ம நோய்க்கு 53 பேர் உயிரிழப்பு

ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 431 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி தென்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால், காங்கோவில் அச்சம் நிலவி வருகிறது. வெளவால் கறி சாப்பிட்ட 3 சிறுவர்களிடம் இருந்து இந்நோய் மற்றவர்களுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.
News February 26, 2025
அமெரிக்காவில் குடியேற ரூ.43 கோடியில் கோல்டு கார்டு: டிரம்ப்

அமெரிக்காவில் தங்க அட்டை (Gold Card) திட்டம் ஒன்றை டிரம்ப் அறிமுகம் செய்துள்ளார். USAவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் டிரம்பின் இந்த அறிவிப்பு பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தங்க அட்டையில் குடியேறுபவர்கள் 5 மில்லியன் டாலர்(₹43 கோடி) செலுத்த வேண்டும் எனவும் இது கிரீன் கார்டை விட அதிக சலுகைகளைக் கொண்டது என்றும் டிரம்ப் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
News February 26, 2025
வேலைக்கு போகும் பெண்கள் மன அழுத்தம் குறைய…

ஆபீஸ் செல்லும் பெண்கள் மன அழுத்தத்தை குறைக்க சில டிப்ஸ்: தினசரி சிறிது நேரம் குழந்தையுடன் செலவிடுங்கள். இது பெருமளவு மன அழுத்தத்தை குறைக்கும் *உங்களுக்காகவும் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். சருமப் பராமரிப்பு, பார்லர் போவது என எதுவானாலும் சரி, உங்களுக்கென சிறிது நேரத்தை செலவிடுங்கள் *மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழி பிறரிடம் பேசி விடுவது. அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பேசுங்கள்!