News August 5, 2025
தவெக 2-வது மாநாடு: TVKவினருக்கு விஜய் கோரிக்கை

மதுரை மாநாட்டுக்கு தவெகவினர் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் கலந்துக் கொள்ளுமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தவெகவின் 2-வது மாநில மாநாடு வரும் 25-ம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி வருவதால் தேதியை மாற்ற போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று வரும் 21-ம் தேதி அதே பிரம்மாண்டத்தோடும், கூடுதல் உற்சாகத்தோடும் மாநாடு நடைபெறவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
BREAKING: போர்நிறுத்தத்தை மீறியது பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் பகுதி அருகே பாக்., ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த நமது ராணுவம் சரியான பதிலடி தந்தது. இந்த சண்டை 15 நிமிடம் நீடித்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லையென கூறப்படுகிறது. மேலதிக தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.
News August 5, 2025
கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு திசை, கேது திசை நேரமாக இருந்தால் அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
News August 5, 2025
சேலம், தென்காசியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை (ஆகஸ்ட் 6) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில், வரும் 23-ம் தேதி சனிக்கிழமையன்று வேலை நாள் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) சங்கரன்கோவில் உள்ள சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.