News January 23, 2025
டங்ஸ்டன் சுரங்கம்: கடந்து வந்த பாதை

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்ததாக, 2024 நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதனால், பல்லுயிர் பாரம்பரிய தலங்கள் அழிய வாய்ப்புள்ளதாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். TN அரசும் கடந்த டிச.9ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. நேற்று மதுரை மக்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசிய நிலையில், இன்று ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
புதுகைக்கு மாநில பாஜக தலைவர் வருகை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டைக்கு 26ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, ஆயத்த கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
News November 21, 2025
BREAKING: புதிய கட்சி தொடங்கும் ராமதாஸ்!

பாமகவை சட்ட ரீதியாக கைப்பற்றும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தனது ஆதரவாளர் ஒருவர் பெயரில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி(APMK) தொடங்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இதற்காக எந்த கட்சியிலும் இல்லாத 100 பேரிடம் பிரமாணப்பத்திரம் வாங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2026 பேரவைத் தேர்தலில் மாம்பழம் சின்னம் தனது தரப்புக்கு கிடைக்காவிட்டால் பொது சின்னத்தை பெற இத்திட்டம் எனக் கூறப்படுகிறது.
News November 21, 2025
இளையராஜா போட்டோக்களை பயன்படுத்த தடை

இளையராஜாவின் புகைப்படங்களை SM-ல் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மற்றும் மியூசிக் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது பெயர், புகைப்படம், இசைஞானி என்ற பட்டம் என எதையும் பயன்படுத்தக்கூடாது என்ற இளையராஜாவின் முறையீடு ஏற்கப்பட்டுள்ளது.


