News December 25, 2024
டங்ஸ்டன் விவகாரம்.. துரைமுருகன் விளக்கம்

டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என 2023 அக்டோபரில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை. இதை சுட்டிக்காட்டி மாநில அரசு ஆட்சேபனை தெரிவித்தபோதும், மத்திய அரசு ஏலத்தை மேற்கொண்டது எனக் குற்றம் சாட்டினார். மேலும், இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுத்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News September 11, 2025
வெண்மேகமே பெண்ணாக உருவான மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரியின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து வெண்மேகம் பெண்ணாக உருவானதோ பாடலை ரசிகர்கள் ரிபீட் மோடில் உருகி உருகி பாடி வருகின்றனர். அவரிடம் மனதை பறிகொடுத்த ரசிகர்கள் இவ்வருடம் உலக அழகி போட்டியெல்லாம் நடத்த தேவையில்லை என்கின்றனர். இதுவரை 2 தமிழ் படங்களில் மட்டுமே மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இனி அவர், அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோள்.
News September 11, 2025
UAEக்கு எதிராக பும்ரா ஆடணுமா? அஜய் ஜடேஜா

UAE-க்கு எதிரான போட்டியில் பும்ரா தேர்வு செய்யப்பட்டதை அஜய் ஜடேஜா விமர்சித்துள்ளார். எப்போதும் பும்ராவை பதுக்கும் நீங்கள் UAE-க்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார். பும்ரா காயமடைவதை தவிர்க்க விரும்பினால் இதுபோன்ற போட்டிகளில் ஆட வைக்காதீர்கள் அல்லது அவரை பாதுகாக்காதீர் என்று கூறினார். இங்கி. எதிரான முக்கியமான தொடரில் பும்ரா 3 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடினார்.
News September 11, 2025
செப்டம்பர் 11: வரலாற்றில் இன்று

*1803 – டெல்லியில் பிரிட்டிஷ் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் 2-ம் ஆங்கிலேய மராத்திய போர். *1921 – சுப்பிரமணிய பாரதி மறைந்த நாள். *1957 – இம்மானுவேல் சேகரன் மறைந்த நாள். *1982 – ஷ்ரேயா பிறந்தநாள். *2001 – நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதல்களில் 2,974 பேர் கொலை. *2012 – பாகிஸ்தானில் ஆடை தொழிற்சாலைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் 315 பேர் உயிரிழப்பு.