News October 18, 2025

தனியார் பல்கலை சட்ட திருத்தத்திற்கு TTV எதிர்ப்பு

image

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலை.,களாக மாற்றும் சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற டிடிவி வலியுறுத்தியுள்ளார். இச்சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும். அதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News October 18, 2025

ரஞ்சி கோப்பையில் தமிழக அணி படுதோல்வி

image

ரஞ்சி கோப்பையில், ஜார்க்கண்டுக்கு எதிரான போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. கேப்டன் இஷான் கிஷனின் அதிரடியால் ஜார்க்கண்ட் முதல் இன்னிங்ஸில் 419 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய தமிழகம் முதல் இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் ஆனது. 2-வது இன்னிங்ஸிலும் தமிழக வீரர்கள் சொதப்பலாக ஆடியதால் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஜார்க்கண்ட் 114 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

News October 18, 2025

முகத்தில் உள்ள தேமல் மறைய சூப்பர் TIPS!

image

முகத்தில் ஆங்காங்கே தேமல் இருப்பதால் வெளியில் முகத்தை காட்டவே தயங்குறீங்களா? இதற்கு டாக்டரை அணுகுவது முக்கியம் என்றாலும், வீட்டிலேயே சரிசெய்ய ஈஸியான வழி உள்ளது. ➤துளசி இலைகளை அரைத்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள் ➤இரவில் படுக்கும் முன் தேமல் உள்ள இடத்தில் தடவுங்கள் ➤1 மணி நேரம் ஊற வைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் தேமல் விரைவில் மறையும். இந்த பயனுள்ள டிப்ஸை SHARE பண்ணுங்க.

News October 18, 2025

எதிர்வீட்டு ஏஞ்சலே! ஐஸ்வர்யா ஷர்மா

image

‘டியூட்’ படத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ஷர்மாவின் இன்ஸ்டா ஐடியை ரசிகர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். பால் போல் வெண்மை நிறத்தில் பிரகாசிக்கும் இவர், ‘டிராகன்’ படத்தில் உதவியாளராகவும், பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்துள்ளார். இவரது போட்டோஷுட் புகைப்படங்கள் வைரலாகும் நிலையில், தமிழ் திரையுலகின் புதிய க்ரஷ் உருவாகிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

error: Content is protected !!