News January 25, 2026

TTV-க்கு 300 ‘C’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டன: புகழேந்தி

image

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்புமணி, தினகரன் ஆகியோருடன் ஒரு கூட்டணிக்காக PM மோடி கைகோர்க்கலாமா என முன்னாள் அதிமுக MLA புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்போது அதிமுக என்ற கட்சியே இல்லை; அதை EPS அணி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், நேற்று EPS-ஐ, ‘அண்ணன்’ என்று அழைத்து, கூட்டணி அமைத்ததற்காக TTV தினகரனுக்கு 300 ‘சி’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News February 13, 2026

எனக்கான Cute Videos-ஐ பார்த்தேன்: விஜய்

image

சிறுவர்களின் எதிர்காலத்திற்காகவும் தான் கட்சி ஆரம்பித்ததாக விஜய் தெரிவித்தார். தனக்காக பெற்றோர்களிடம் சிறுவர்கள் வாக்கு சேகரிக்கும் Cute Video-களை பார்த்ததாக கூறிய அவர், அனைவரிடமும் இதையே செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும், யார்மீதும் தனிப்பட்ட வன்மமோ, கோபமோ இல்லை எனவும், தேர்தலில் ஜெயித்து மக்களுக்கான நன்றிக் கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News February 13, 2026

100% தூய சக்தி தவெக தான்: விஜய் பேச்சு

image

4.45 ஆண்டுகளுக்கு பிறகு ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ என்று திமுக அரசு ஒவ்வொருவரின் வீட்டுக் கதவை தட்டுகிறது என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், உண்மையான மக்களின் கனவு என்னவென்றால், பாதுகாப்பில்லாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் என தெரிவித்தார். எனவே, 100% தூய சக்தியான தவெக நேர்மையான ஆட்சியை கொடுக்கும், இந்த விஜய் அந்த ஆட்சியை வழங்குவான் என்றும் கூறினார்.

News February 13, 2026

காதுலயே விசில ஊதி அனுப்புங்க..: விஜய்

image

காசு கொடுத்து வாக்கை வாங்கிவிடலாம் என்ற கணக்கு, தன்னுடைய வருகைக்கு பிறகு வேலைக்கு ஆகாது என விஜய் கூறியுள்ளார். தேர்தலுக்காக கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக்கொள்ளுங்கள் அது உங்கள் பணம் தான் என்ற அவர், வாங்கிவிட்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள் என கிண்டலடித்துள்ளார். மேலும், பணத்தை கொடுத்தால் ஏமாறக்கூடாது எனவும், இதற்கு எதிராக உறுதிமொழி எடுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!