News August 14, 2024
ஜெட் வேகத்திற்கு இணையான சுனாமி!!

சுனாமியின் கோரத் தாண்டவத்தை உலக மக்கள் அனைவருமே பார்த்துள்ளனர். சுனாமி எப்படி உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுனாமியின் வேகம் எவ்வளவு தெரியுமா? சுனாமி ஆழ்கடலில் பயணித்து கரை அருகே எழும்பும். அப்படி ஆழ்கடலில் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் சுனாமி பயணிக்கும். அதாவது ஒரு ஜெட் வேகத்திற்கு இணையான வேகத்தில் வரும் சுனாமி, ஒரு பெருங்கடலையே ஒரு நாளுக்குள் கடந்து விடுமாம்.
Similar News
News December 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 540
▶குறள்:
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
▶பொருள்: கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
News December 5, 2025
பகவத் கீதையை புடினுக்கு பரிசளித்த PM மோடி

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு PM மோடி பகவத் கீதையை பரிசளித்துள்ளார். இதுபற்றி X-ல் PM மோடி, பகவத் கீதையின் போதனைகள் உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிபர் புடினுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
News December 5, 2025
பிரித்து ஆளும் கொள்கை உடைய திமுக: தமிழிசை

தமிழ் வேறு இந்து மதம் வேறு என்று கூறிய சட்ட அமைச்சர் ரகுபதிக்கு தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ் என்றும், தமிழையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசின் பிரித்தாலும் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று X-ல் தமிழிசை பதிவிட்டுள்ளார்.


