News August 5, 2025
டிரம்ப் மிரட்டல்.. இந்தியா கண்டனம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கினால் இன்னும் அதிகம் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியிருந்த நிலையில், அமெரிக்கா ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தேச நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News August 5, 2025
டால்ஸ்டாய் பொன்மொழிகள்

*அனைத்தையும் நேசிக்க முடிந்ததால் தான் என்னால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. *எதுவும் தெரியாது என்ற நிலையே மனித ஞானத்தின் மிக உயர்ந்த நிலை. *பொறுமை மற்றும் நேரம் தான் 2 சக்திவாய்ந்த போர்வீரர்கள். *மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல, அது நாம் அவற்றைப் பார்க்கும் விதத்தில் உள்ளது. *ஒவ்வொருவரும் உலகை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை.
News August 5, 2025
சீன நிறுவனங்களுடன் கைகோர்ப்பா? அதானி மறுப்பு

சீன நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் EV பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவலை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. EV கார் உற்பத்தி நிறுவனமான BYD மற்றும் Beijing Welion New Energy Technology நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும், இந்த தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழிநடத்துவது என்றும் மறுத்துள்ளது.
News August 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 418 ▶குறள்: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. ▶பொருள்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.