News April 3, 2025
டிரம்ப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடி லாஸ்?

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 26% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த கூடுதல் வரிவிதிப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என அவர்கள் கணித்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% ஆகும்.
Similar News
News April 12, 2025
“தோனியை விமர்சிக்கலாம்.. அவமானப்படுத்தகூடாது”

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இர்பான் பதான் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் ஒரு கிரிக்கெட் வீரரின் செயல்பாடுகளை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு ஆனால் எல்லை மீறக்கூடாது என தெரிவித்துள்ளார். தோனி ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர்.. அவரது தலைமையில் இந்தியா பல கோப்பைகளை வென்றுள்ளது. தோனி குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை சமூக ஊடங்களில் தவிர்ப்பது நல்லது என இர்பான் கேட்டுக்கொண்டுள்ளார்.
News April 12, 2025
தமிழக மக்களுக்கு இபிஎஸ் துரோகம்: கனிமொழி சாடல்

பாஜகவின் பல மசோதாக்களை எதிர்ப்பது போல் எதிர்த்த இபிஎஸ் இன்று அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்லிவிட்டு தற்போது நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு அதிமுக துரோகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக அதிமுக பிரிந்து விட்டதாக சொல்வது நாடகம் என முதல்வர் சொன்னது உண்மையாகிவிட்டதாகவும் கனிமொழி கூறியுள்ளார்.
News April 12, 2025
வரலாற்றில் இன்று

➤1983 – காந்தி திரைப்படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது. ➤2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கி.மீ. தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது. ➤1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. ➤2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்,