News November 15, 2024
வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத டிரம்ப் மனைவி

டிரம்ப் மனைவி மெலானியா, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து வசிக்க மாட்டார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு ஒரு காரணமும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக புளோரிடாவில் தனக்கான நட்பு வட்டாரத்தை உருவாகியுள்ள மெலானியா, அங்கேயே அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். இதன் காரணமாகவே இவர், அம்மாகாணத்தில் தொடர்ந்து வசிக்க விரும்புவதால், வெள்ளை மாளிகையில் அதிக நேரம் இருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 1, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
News March 1, 2026
உதயநிதிக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த PM மோடி

மதுரை பொதுக்கூட்டத்தில் DCM உதயநிதிக்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் யாரோ ஒருவர் தனக்கும் தனது தந்தைக்கும் பயமில்லை என பேசுவதாக கேள்விப்பட்டேன் என்ற அவர், ஜனநாயக நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்றார். மேலும், என்னிடத்தில் பயமில்லை என ஒருவர் கூறுவதை நான் என் மீதான விமர்சனமாக கருதவில்லை எனவும், மாறாக ஜனநாயகத்தை சரியாக பின்பற்றியதற்கான பாராட்டு என்றும் கூறியுள்ளார்.
News March 1, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகை இம்மாதம் 31 வரை அமலில் இருக்கும். உடனே முந்துங்கள் நண்பர்களே!


