News February 12, 2025
இந்தியர்களை அடிமை போல் நடத்தும் டிரம்ப்: கார்கே

பிரதமர் மோடியின் நண்பர் டொனால்ட் டிரம்ப், இந்தியர்களை அடிமைகள் போல் நடத்துவதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை, பயணிகள் விமானத்தில் அனுப்பாமல், சரக்கு விமானத்தில் அனுப்புவது அதையே காட்டுவதாகவும், இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் பேச வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 4, 2026
உஜ்வாலா பயனாளிகளுக்கு சிக்கல் இல்லை

மேற்காசிய போரினால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விலையும் அதிகரித்தது. போர் தொடர்ந்து வருவதால் சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. ஆனால், PM உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு ₹300 தள்ளுபடியுடன், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டருக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்திட்டத்தில் பயன்பெறும் கிராமப்புற மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
News April 4, 2026
வெறும் வயிற்றில் மது குடித்தால்…

மது பிரியர்கள் சில டிப்ஸ் மூலம் ஆல்கஹாலால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். *குறைந்த நேரத்தில் அதிக மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். *மது போதையில் இருக்கும்போது புகைப் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. *வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. *2 (அ) அதற்கு மேலான மது வகைகளை மிக்ஸ் செய்து குடிப்பதை கைவிடவும். *இப்படி செய்தால் ஹேங்க் ஓவர், உடல்நலப் பிரச்னையை தடுக்கலாம். SHARE
News April 4, 2026
திருமாவளவனுக்கு மாற்றாக ஜோதிமணி.. யார் இவர்?

காட்டுமன்னார்கோவிலில் <<19567832>>திருமாவளவன் அறிவித்துள்ள வேட்பாளர் <<>>ஜோதிமணி, விசிக உறுப்பினர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸில்(காங்., EX தலைவர் இளையபெருமாளின் மகன்) இருக்கும் அவருக்கு இது இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. விசிக (அ) காங்., எந்த சின்னத்தில் போட்டி என தெரியவில்லை என சற்றுமுன் பேட்டியளித்துள்ளார். ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிப்பில் விசிக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக பேச்சு உள்ளது.


