News August 7, 2025
ரஷ்ய அதிபரை சந்திக்கும் டிரம்ப்

ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு தலைவர்களையும் டிரம்ப் அடுத்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்யாவிற்கு குறிப்பிட்ட நாள்கள் கெடு விதித்திருந்த நிலையில், தற்போது அந்நாட்டு அதிபரை நேரில் சந்திக்க உள்ளார். பல நாடுகளின் போரை நிறுத்தியதாக கூறி வரும் டிரம்ப்பிற்கு, உக்ரைன் விவகாரம் தலைவலியாக மாறி உள்ளது.
Similar News
News August 7, 2025
காலையில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவது ஏன்?

காலை 6 மணி- 11 மணி வரையில் தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் , ரத்தம் & இதய அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும், ரத்தம் இறுகி, தடிமனாக இருப்பதால், குழாய்களில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. முதலில் நினைவில் கொள்ளுங்கள், உடல் உழைப்பின்றி இருப்பவர்களுக்கு திடீரென தூக்கத்திலிருந்து அதிர்ந்து போய், எழுவதும் அதிக அழுத்தம்தான்.
News August 7, 2025
பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு

நாடு முழுவதும் CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவு விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு, உரிய ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வ விண்ணப்பங்கள் பெற்று, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News August 7, 2025
சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள ஒரே தனி கோயில்!

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோயில்தான், தமிழகத்தில் சரஸ்வதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரே தனி கோயிலாகும். ஒட்டக்கூத்தருக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைத்த இடம் இது எனக் கூறப்படுகிறது. வெள்ளை நிற ஆடையில், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தில் இங்கு நடைபெறும் பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.