News March 17, 2024
அமெரிக்கர்களுக்கு டிரம்ப் மிரட்டல்

அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என மிரட்டல் விடுத்து முன்னாள் அதிபர் டிரம்ப் பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், ” அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் ரத்த ஆறு ஓடும்” என்றார். 2020ம் ஆண்டு தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 3, 2025
ராமதாஸ், அன்புமணி சேர வேண்டும்: காங் தலைவர்

ராமதாஸும், அன்புமணியும் ஒன்று சேர வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பூந்தமல்லியில் பேசிய அவர், ஏராளமான போராட்டங்களை நடத்தி பல்வேறு மருத்துவர்களை உருவாக்கியவர் ராமதாஸ் என குறிப்பிட்டார். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இருவரும் தங்கள் சார்ந்த சமூக மக்களின் நலனுக்காக, ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என திருநாவுக்கரசர் கூறினார்.
News September 3, 2025
3-ம் உலகப்போர்? ஆர்டர் போட்ட ஃபிரான்ஸ்

போர் சூழலுக்கு ஏற்றவாறு 2026-க்குள் தயாராகும்படி ஹாஸ்பிடல்களுக்கு ஃபிரான்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – NATO நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 10 -180 நாள்களுக்குள் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க தயாராக அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா – NATO நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், அது 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.