News October 14, 2025
இந்தியா, PM மோடியை புகழ்ந்த டிரம்ப்!

இந்தியா சிறந்த நாடு, PM மோடி எனது சிறந்த நண்பர் என காஸா அமைதி உச்சி மாநாட்டில் டிரம்ப் புகழாரம் சூட்டினார். மேலும், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் இருவரும் நன்றாக வாழப்போகிறார்கள் என தான் நினைப்பதாகவும், தன்னை பொறுத்தவரை இருநாட்டு தலைவர்களும் சிறந்தவர்கள் என பாக்., PM ஷெபாஸ் ஷெரிப்பையும் புகழ்ந்தார். டிரம்ப்பின் பாக்., ஆதரவு பேச்சுக்கு ஆதரவு & எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 14, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி சில ஆம்னி <<17980771>>பஸ்களில் கட்டணம் 4 மடங்கு<<>> உயர்ந்துள்ளது. இதனிடையே, ஆம்னி பஸ்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை TN அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட இக்குழு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம், ஆவணங்களை அக்.21 வரை கண்காணிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால், கட்டணம் உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ளது.
News October 14, 2025
CM ஸ்டாலின், திருமாவளவன் சந்திப்பு.. பேசியது என்ன?

சட்டப்பேரவை வளாகத்தில் CM ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
News October 14, 2025
PAN Card-ல் இதை கவனியுங்க… இல்லனா ₹10 ஆயிரம் அபராதம்!

செயல்பாட்டில் இல்லாத பான் கார்டை உபயோகப்படுத்தினாலோ, ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டாலோ, ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா என்பதை அறிய ◆e-Filing தளத்தில், Quick Links-ஐ கிளிக் பண்ணுங்க ◆Verify Your PAN-ஐ கிளிக் செய்து, பான் எண் & தனிநபர் தகவலை கொடுத்து, சரிபார்க்கவும். மேலும், வரும் டிச. 31-க்குள் ஆதாருடன் பான் கார்டை இணையுங்கள்.