News March 20, 2025
அமெரிக்க கல்வித் துறையை கலைக்க டிரம்ப் திட்டம்!

அமெரிக்க கல்வித் துறையை கலைப்பதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.6 ட்ரில்லியன் கல்விக் கடன் சுமையை சமாளிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக கல்வித் துறை நிர்வாகத்தை மாகாண அரசுகளிடமே ஒப்படைக்கவுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே 85% செலவினங்களை மாகாண அரசுகள் ஏற்றுக் கொண்டிருப்பதால், இம்முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News July 9, 2025
தமிழக அரசியலில் புதிய பெண் தலைவர்.. பாமகவில் திருப்பம்!

அன்புமணிக்கு போட்டியாக அவரது சகோதரி ஸ்ரீகாந்தி களமிறக்கப்பட்டுள்ளார். தைலாபுரத்தில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் முதல் அரசியல் மேடை ஏறிய ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார். இவரது மகன் முகுந்தனுக்கு பதவி வழங்கியதை எதிர்த்துதான் அன்புமணி சண்டையை தொடங்கினார். அதிமுகவில் ஜெயலலிதா, தேமுதிகவில் பிரேமலதா வரிசையில் பாமகவின் தலைமைக்கு ஸ்ரீகாந்தி வரவுள்ளதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.
News July 9, 2025
இந்தியாவுக்கு கூடுதலாக 10% வரிவிதிப்பு: டிரம்ப்

இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வரியுடன் விரைவில் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பினர் அமெரிக்க டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால் அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது அமலாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
’சுரங்கப்பாதைக்கு அனுமதி தராததே விபத்துக்கு காரணம்’

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்தும் மாவட்ட ஆட்சியர் ஓராண்டாக அனுமதி தராததே விபத்துக்கு காரணம் என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நடப்பாண்டில் கடலூரில் எத்தனை முறை CM ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் எனவும் கேள்வி எழுப்பினார்.