News April 29, 2025
கனடாவுக்கு ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் டிரம்ப்

கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாறினால், மக்களின் வரிச் சுமை வெகுவாக குறையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உங்கள் வரிகளை பாதியாக குறைக்க போகும் நபரை தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ள அவர் US-யுடன் இணைந்தால் மக்களுக்கு பல இலவசங்கள் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
Similar News
News November 8, 2025
Nobel Prize: முதல் முதலாக வென்றது இவர்கள் தான்!

நோபல் பரிசு, உலகளவில் பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. தனக்கு நோபல் பரிசு வேண்டும் என டிரம்ப் கேட்டதற்கும் இதுவே காரணம். ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் தான், நோபல் பரிசை நிறுவினார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 1901-ல் முதலாக இந்த நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.
News November 8, 2025
பெரியார், அண்ணா போல பணியாற்றும் உதயநிதி: CM

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் DCM உதயநிதி என திமுக நடத்தும் அறிவு திருவிழாவில், ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்ட அவர், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

பிரபல இயக்குநரும், நடிகருமான <<18174237>>V.சேகர்<<>> உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்த அவர் ஒருவார காலமாக சென்னை போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். V.சேகர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக FEFSI சார்பில் RK செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் ஹாஸ்பிடலில் V.சேகரை நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.


