News August 30, 2025
டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: UK மீடியா விமர்சனம்

சீனாவைக் காட்டிலும் இந்தியா மீது அதிக வரிவிதித்து டிரம்ப் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக UK ஊடகமான The Economist விமர்சித்துள்ளது. பாகிஸ்தானுடன் நெருங்கி பழகுவதன் மூலம், 25 ஆண்டுகால ராஜதந்திர உறவை டிரம்ப் பாழாக்கி விட்டதாகவும், வளர்ந்து வரும் வல்லரசு நாடான இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. மேலும், BRICS மற்றும் PM மோடியின் சீன பயணத்தையும் வரவேற்றுள்ளது.
Similar News
News August 31, 2025
இவரே ODI கேப்டனுக்கு தகுதியானவர்: ரெய்னா

அடுத்த ODI உலககோப்பைக்கு இப்போது இருந்தே வலுவான அணியை உருவாக்க நினைக்கும் BCCI, ரோகித்துக்கு பதில் புதிய கேப்டனை தேட தொடங்கியுள்ளது. தகுதியான நபர் சுப்மன் கில்லா, ஸ்ரேயஷ் ஐய்யரா என BCCI யோசித்து வருகிறது. ஆனால், ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவே ODI-க்கு சிறந்த கேப்டனாக இருக்க முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். தோனியின் தோற்றத்தை ஹர்திக்கிடம் பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News August 31, 2025
பென்ஷன் கேட்டு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம்

முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததற்கான ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஒப்புதல் கிடைத்தால், தன்கருக்கு மாதம் ₹42,000 ஓய்வூதியம் கிடைக்கும். உடல்நலக் காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பிறகு, தன்கர் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
News August 31, 2025
விஜய்க்காக அரசியல் படம் இயக்கினேன்: முருகதாஸ்

விஜய் கேட்டுக்கொண்டதாலேயே அரசியல் படமான சர்காரை இயக்கியதாக முருகதாஸ் தெரிவித்துள்ளார். கத்திக்கு பிறகு விஜயை வைத்து இலங்கை அகதியின் கதை ஒன்றை பண்ண முடிவெடித்ததாகவும், ஆனால் விஜய் அரசியல் படம் வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். படத்தில் அமைந்த விஜய்யின் சர்கார் நிஜத்தில் அமையுமா? கமெண்ட் பண்ணுங்க மக்களே…