News March 29, 2025
வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து கொடுத்த ட்ரம்ப்

USA அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தை வழங்கினார். இதில் USA முஸ்லிம் சமூகத்தினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிபர் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தினர் தனக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்தது நம்ப முடியாத அளவிற்கு இருந்ததாகவும், அதற்கு சிறப்பு நன்றியும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை உருவாக்க தனது நிர்வாகம் உழைத்து வருவதாகவும் கூறினார்.
Similar News
News October 16, 2025
போட்டோவை வைத்து பாக்.,ஐ ட்ரோல் செய்த இந்தியா

கஜகஸ்தான் மேஜர் ஜெனரல் உடன் இந்திய ராணுவ தளபதி சந்தித்த போட்டோ வெளியானது முதல், இந்தியா பாக்.,ஐ மறைமுகமாக ட்ரோல் செய்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். காரணம், அந்த போட்டோவுக்குள் இருக்கும் போட்டோ, 1971-ல் அப்போதைய பாக்., ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை குறிக்கிறது. இதன் பிறகே வங்கதேசம் நாடு உருவானது.
News October 16, 2025
இதுதான் வடகிழக்கு பருவமழை..!

நிலம் கடலுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடு காரணமாக பருவமழை ஏற்படுகிறது. நிலப்பரப்பில் உருவாகும் உயர் அழுத்தத்தால் காற்று வடகிழக்கு திசையில் வீசுகிறது. இது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து, தமிழகம் மற்றும் இந்திய கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழையை தருகிறது. இதுவே வடகிழக்கு பருவமழை. இது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிகழ்கிறது. இதை, ‘பின்னடையும் பருவமழை’ என்றும் அழைக்கின்றனர்.
News October 16, 2025
சற்றுமுன்: பங்குச் சந்தைகள் பெரும் லாபத்துடன் நிறைவு

இந்திய பங்குச் சந்தைகள் இன்று நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 862 புள்ளிகள் உயர்ந்து 83,467 புள்ளிகளிலும், நிஃப்டி 261 புள்ளிகள் உயர்ந்து 25,585 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நெஸ்லே, கோடக் மஹிந்திரா, டைட்டன், ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. HDFC லைஃப், எடர்னல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், SBI லைஃப் இன்சூரன்ஸ், ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்தன.