News February 28, 2025
வெளிநாட்டு நிதியுதவியை 90% குறைக்க டிரம்ப் முடிவு

USAID வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. USA அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டுகிறார். கடந்த 2023இல் இந்திய மதிப்பில் ₹5.17 லட்சம் கோடி (60 பில்லியன் டாலர்) ஒதுக்கியது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் USAID நிதியை முடக்கினார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 பேரை நீக்கம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2025
TNPSC தொழில்நுட்ப பணிகள் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவி பொது மேலாளர், உதவி இயக்குநர், பர்சர் உள்ளிட்ட 20 பதவிகளில் 109 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் 125 நாட்களில் வெளியிடப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளைப் பார்க்க இங்கே <
News February 28, 2025
பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

பாஜகவின் அடுத்த தலைவர் மார்ச் 15க்குள் அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே 12 மாநிலங்களில் அக்கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தப்பின் தேசிய தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய தலைவர் நட்டாவின் பதவிகாலம் கடந்த ஜூன் 2024ல் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
News February 28, 2025
மரணத்தை முன்னரே சொல்லும் கிணறு!

வாரணாசி காசி விஸ்வநாத் கோவிலுக்கு அருகில் சித்தேஸ்வரி மந்திர் வளாகத்தில், சந்திரனால் உருவானதாக நம்பப்படும் ‘சந்திரகூப்’ என்ற கிணறு உள்ளது. இது, மரணத்தை முன்னரே வெளிப்படுத்தும் சக்தி கொண்டது என பக்தர்கள் நம்புகிறார்கள். இந்து புராணங்களின் படி, யாராவது இக்கிணற்றைப் பார்த்து, அவர்களின் பிரதிபலிப்பு அதில் தெரியவில்லை என்றால், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் மரணிப்பார்கள் என நம்பப்படுகிறது.